சிறிய கட்சிகளின் ஆதரவை நாடியுள்ள இம்ரான் கான்..!

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க உள்ள நிலையில் தனிப்பெரும்பான்மை இல்லாததால், சிறிய கட்சிகளின் ஆதரவை அவர் நாடியுள்ளார்.

270 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு 115 இடங்கள் கிடைத்தன. நவாஸ் ஷெரீப் கட்சி 62 இடங்களையும், பிலாவால் பூட்டோ கட்சி 43 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஜமாத் இ இஸ்லாமி கட்சிக்கு 12 இடங்களும், முன்னாள் முதலமைச்சர் பெர்வஸ் இலாஹியின் கட்சிக்கு 5 இடங்களும், கராச்சியை மையமாகக் கொண்ட முத்தாஹிதா குவாமி இயக்கம் கட்சிக்கு 6 இடங்களும் கிடைத்திருப்பதால் இக்கட்சிகளின் தலைவர்களுடன் இம்ரான்கான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *