கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டால் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

ரகானே, விராட் கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 50 ஓவரில் 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 253 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா 43.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம், இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *