குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை நிர்வகிக்கும் செயலி

குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை, அவர்களது பெற்றோர் நிர்வகிக்கும் புதிய செயலியை, கூகுள் நிறுவனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் ஃபேமிலி லிங் என்ற செயலியை கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம், தங்களது குழந்தைகள் எந்த மாதிரியான இணையதளங்களை பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை பெற்றோர்களே தங்களது ஸ்மார்ட்போன் மூலம் நிர்வகிக்கலாம் என்று அறிவித்தது.

மேலும், ஒரு வாரத்தில் தங்கள் குழந்தைகள் பார்த்த இணையதளங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ஆய்வு செய்யலாம் என கூறிய கூகுள் நிறுவனம், வெளியில் சென்றுள்ள குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதையும், இந்த செயலி மூலம் தங்களது செல்போன் மூலமே அறிந்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது. இந்த செயலியை தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் நிறுவனம், Google Family Link for parents என்ற பெயரில் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *