குட்டியுடன் தவித்த திமிங்கலங்களை அழைத்துச் சென்ற டால்பின்கள்

ஆஸ்திரேலியாவில் வழிமாறிச் சென்ற திமிங்கலத்தையும், அதன் குட்டியையும் டால்பின்கள் வேறுபாதைக்கு அழைத்துச் சென்றன.

கடல் ஆய்வாளர் ஜான்கூட்ரிஜ் ((John Goodridge)) என்பவர் சிட்னி துறைமுகப்பகுதியில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது 40 டன் எடை கொண்ட ஹம்ப்பேக் ((Humpbacks)) வகை திமிங்கலம் ஒன்று தனது குட்டியுடன் வெப்பநீரோட்டத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்ததைப் படம் பிடித்தார்.

இதனைப் பார்த்த அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட டால்பின்கள் திமிங்கலங்களை திசை திருப்பி குளிர் நீரோட்டத்தின் பக்கம் அழைத்துச் சென்றன. ஹம்ப்பேக் திமிங்கலத்தின் குட்டி டால்பினுடன் விளையாடிய காட்சி ஆய்வாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *