கிகி சேலஞ்ச் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

ஓடும் காரில் இருந்து குதித்து ஆடும் கிகி சேலஞ்ச் என்ற நடனம் மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கனடா நாட்டின் பாடகர் ஆப்ரே டிராக்கி கிரகாம் தமது ஸ்கார்பியன் என்ற இசை பாடல் தொகுப்பை அண்மையில் வெளியிட்டார். இந்த பாடல் தொகுப்பில் அடங்கிய இன் மை பீலிங்ஸ் என்ற பாடலில் இடம்பெற்றுள்ள கிகி ஐ லவ்யூ என்ற வரிகளை காரில் ஒலிக்கவிட்டு, கீழே இறங்கி நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் ஏறவேண்டும் என்பதுதான் சவால்.

இந்த மோகம் அமெரிக்கா, மலேசியா, ஸ்பெயின் என பல நாடுகளில் பரவியுள்ளது. இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. எனவே இவ்வாறு நடனம் மேற்கொள்ளும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.

தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. பிரபல நடிகை ரெஜினாவும் ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோ‌வை வெளியிட்டுள்ளார். இதனிடையே டெல்லி, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

சமீப காலமாகவே சேலஞ்ச் என்ற பெயரில் பல விஷயங்கள் பிரபலமாகி வருகிறது. முன்னர் ஒரு காலத்தில் ‘ஐஸ் பக்கெட்’ சேலஞ்ச் இணையத்தில் பிரபலமானது. அதனைத்தொடர்ந்து சமீபத்தில் ஃபிட்னஸ் சேலஞ்சும் இணையத்தை கலக்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *