காயிதே மில்லத் அவர்களின் 123-வது பிறந்த நாள் – க.மாதவன் மரியாதை

முஹம்மது இஸ்மாயில் 1896 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிறந்தார்.
சாகிபு இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர்.
முகம்மது இஸ்மாயில்
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்பட்டவர்.காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.
திருநெல்வேலி பேட்டையில் பிறந்தவர். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர்.
இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயாரே அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் முகம்மது மியாகான்.
பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.
1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.

காயிதே மில்லத்தின் பெயர் தற்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது. காயிதே மில்லத் அரசினர் பெண்கள் கல்லூரி, சென்னை மற்றும் காயிதே மில்லத் கலைக் கல்லூரி, மேடவாக்கம், சென்னை ஆகியவை அவற்றுள் சில.காயிதே மில்லத் நினைவாக சென்னையில் காயிதே மில்லத் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அன்னாரது பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *