கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் முடிவு செய்யும் என ரஜினிகாந்த் கருத்து; ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் பேட்டி.…

கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் முடிவு செய்யும் என ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அந்த கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தமது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தமது ரசிகர் மன்றம் மூலம் கட்சி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21ஆம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த கமலுஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் கமலுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு, காலம் தான் பதில் சொல்லும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், ரஜினியின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசனும் தெரிவித்துள்ளார். ஆன்மீக அரசியல் என்பது ரஜினியின் நம்பிக்கை என்றும் தமது அரசியல் வேறு என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் தங்களின் பலத்தை உணரச் செய்ய வேண்டும் என்பதே தமது ஆசை என்று கூறிய அவர், மக்கள் பிரச்சனையை மக்களிடமே எடுத்துச் செல்வதற்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *