கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 78 டாலருக்கு கீழ் குறைந்தது.
கோர்டோன் புயல் தாக்கம் காரணமாக அமெரிக்காவின் வளைகுடா கடற்கரைப் பகுதிகளில் உள்ள 12க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.இதனால் செவ்வாய் கிழமை அன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 79.72 டாலராக இருந்தது. இன்று புயல் வலுவிழந்ததை தொடர்ந்து எண்ணெய் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இதனால் கச்சா எண்ணெய் விலை 78 டாலருக்கு கீழ் குறைந்து ஒரு பேரல் 77.15 டாலராக குறைந்தது.