உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதி இன்று அறிவிக்கப்படுமா ? ; மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலுக்காக எதிர்பார்ப்பு அதிகரிப்பு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்குமா அல்லது மீண்டும் கால அவகாசம் கேட்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. (vo)

தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள்,12 ஆயிரத்து, 524 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இவற்றின் பதவிக் காலம் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி நிறைவடைந்தது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக, மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி, தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டது. பின்னர் இத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, ‘உள்ளாட்சி தேர்தலை, நவம்பர் 17 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதற்கான அறிவிப்பை, செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்’ எனவும், மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஆனால். இட ஒதுக்கீடு அடிப்படையில், தொகுதி வரையறை பணிகள், இன்னும் முடிவு பெறவில்லை. இதனால், இன்று தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா அல்லது மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் கால அவகாசம் கேட்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *