இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை, வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை, டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில், நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இ.பி.எஸ்., – ஓ.பி.எஸ்., தரப்பில் முகுல் ரோஹத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், விஜயகுமார், குரு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜராகினர். டிடிவி தினகரன் தரப்பில் விஜய் ஹன்சாரியா ஆஜரானார். இந்த விசாரணையில் ஜெ.தீபா தரப்பு பங்கேற்காமல் புறக்கணித்தது. இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய ஒரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். மேலும் எதிரணியினர் தாக்கல் செய்த ஆவணங்கள் கட்டாயபடுத்தி தயாரிக்கப்பட்டவை என அவர் குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு, தங்களுக்கு 116 எம்எல்ஏக்கள் , 42 எம்பிக்கள் ஆதரவாக உள்ளனர் எனக்கூறியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான முகுல் ரோத்தஹி, துணை பொது செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது அல்ல என தெரிவித்தார். மேலும், 5 ஆண்டுகள் உறப்பினராக இல்லாத சசிகலா, பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதும் செல்லாது என ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை, வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *