இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரலெசும் மோதினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பி.வி. சிந்து 21க்கு 12, 19க்கு 21, 21க்கு 11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவாலும், அமெரிக்காவின் பெய்வான் சாங்கும் மோதினர். இதில் 21 க்கு 10, 21 க்கு13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று பெய்வான் சாங் அரையிறுதிக்கு முன்னேறினார்.
2018-02-03