இந்திய எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் அலைபேசி கட்டணம் குறைக்கபட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இந்தியா – சீனா மற்றும் இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் கடைக்கோடி எல்லப்பகுதிகளில் காவல் பணியில் மத்திய துணை ராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படையினர், இந்திய – திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் ஆகியோர் தாய்நாட்டை பாதுக்காக்கும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். தொலைதூர பகுதிகளில் பணியாற்றும் இவர்கள் குடும்பத்தாருடன் அவ்வப்போது தொடர்புகொண்டு பேச கைபேசி சிக்னல் கிடக்காததால் மத்திய அரசுக்கு
சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் அளித்துவரும் டி.எஸ்.பி.டி எனப்படும் செயற்கோள் அழைப்பின் வழியாக பேசி வருகின்றனர். இந்த சேவையை பெறுவதற்கு மாத வாடகையாக 500 ரூபாயும், அழைப்பு கட்டணமாக நிமிடத்திற்கு 5 ரூபாயும் செலுத்த வேண்டியிருந்தது. இந்நிலையில், மாத வாடகை கட்டணம் ஏதுமின்றி, நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் தங்களது குடும்பத்தாருடன் பேசும் சலுகையை மத்திய அரசு இவர்களுக்கு அளித்துள்ளது. இந்த சலுகை தீபாவளி தினமான நேற்று முதல் அமல்படுத்தப்பட்டதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *