இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் சமபலத்துடன் உள்ளது. இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இரு அணிகளும் அதிரடியாக விளையாடும் என்பதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *