ஆளில்லாத ஹெலிகாப்டர்களைத் தயாரித்தது சீனா

கலவரங்களைக் கட்டுப்படுத்தவும், உளவுப் பணிகளுக்கும் பயன்படும் வகையில் ஆளில்லாத ஹெலிகாப்டர்களை சீனா தயாரித்துள்ளது.

வடகிழக்கு சீனாவில் உள்ள ஷென்யாங் (Shenyang) நகரில் உள்ள வானூர்தி ஆராய்ச்சித் திட்ட விஞ்ஞானிகள் இதனை வடிவமைத்துள்ளனர். இதற்கு முன் மற்ற நாடுகள் கண்டுபிடித்துள்ள ஆளில்லா ஹெலிகாப்டர்கள் தரைதளத்தில் இருந்து மட்டுமே பறக்கவும் இறக்கவும் அனுமதிக்கப்பட்டன. ஆனால் ஷியாங்இங் 200 (Xiangying 200) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர் முதன் முதலாக போர்க்கப்பலில் இருந்து இயக்கும் முறையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் மூலம் உள்நாட்டு உளவு வேலைகளையும், கலவரங்கள், போராட்டங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் முடியும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *