ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கான கடைசிபோட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கான கடைசிபோட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இன்று மாலை மோதுகிறது. லீக் சுற்றில் பாகிஸ்தானை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. சூப்பர் 4 சுற்றில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி ஏறக்குறைய இறுதிப்போட்டியை உறுதி செய்துள்ளது. இன்று மாலை நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *