ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்டோர் அறிவிப்பு

சென்னை சேப்பாக்கத்தில் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகம் சார்பில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பாரதிராஜா, சத்யராஜ், அமீர், ஆர்.கே.செல்வமணிஉள்ளிட்டோர் காவிரிக்காக நடைபெறும் போராட்டத்தை திசைதிருப்பும் கொண்டாட்டமாக ஐ.பி.எல். போட்டி நடத்தப்படுவதாகக் கூறினர். அதனை எதிர்த்து, நடக்கப் போகும் தார்மீக ரீதியான யுத்தம் எங்கு, எப்போது என்பதை நடக்கும் போது தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.

 

40 ஆண்டுகளாக தாம் நடிப்பதாகவும், நேர்மையாக இருப்பதால் ஐ.டி. ரெய்டுக்கு அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள சத்யராஜ், அப்பா வேடத்தில் நடிக்கும் சத்யராஜைக் கண்டு மாபெரும் தலைவர்கள் அஞ்சத் தேவையில்லை எனத் தெரிவித்தார். எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கமும் தமக்கு இல்லை என அவர் விளக்கமளித்தார்.

 

ஜல்லிக்கட்டுக்குப் பின், இளைஞர்களின் எழுச்சி காவிரிக்காக அதிகரித்து வரும் போது, அதை திசைதிருப்பும் வகையில் ஐ.பி.எல்., தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.

 

இரண்டு ஆண்டுகளாக சூதாட்டம் நடந்த சி.எஸ்.கே. அணியின் விளையாட்டை பார்க்காமல் யாரும் உயிரிழக்கவில்லை எனக் கூறிய ஆர்.கே.செல்வமணி, விவசாயிகளுக்காக ஐ.பி.எல். போட்டியைப் புறக்கணித்தாலும் யாரும் உயிரிழக்கப்போவதில்லை என தெரிவித்தார்.

விரிக்காக ஒற்றுமையாக போராட மட்டும் கட்சி, வண்ணம், கொடி, பேதம் கடந்து இணையுங்கள் என பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *