2018ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

2018ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை அளித்து வருகிறோம். திமுக தலைவர் கலைஞர், புதுச்சேரி முதலமைச்சர் வெ.நாராயணசாமி, முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர்.இரா.நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பலருக்கும் இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சான்றோரின் பட்டியலை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

அம்பேத்கர் சுடர் – கேரள முதலமைச்சர் மாண்புமிகு.பினராயிவிஜயன்

பெரியார் ஒளி – ஆந்திரத்தைச் சார்ந்த மக்கள் பாடகர் தோழர்.கத்தார்

காமராசர் கதிர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர்.

காயிதேமில்லத் பிறை – ’வைகறை வெளிச்சம்’ இதழாசிரியர் மு.குலாம் முகமது

அயோத்திதாசர் ஆதவன் – மருத்துவர் அ.சேப்பன் (மறைவிற்குப் பின்)

செம்மொழி ஞாயிறு – ’பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *