வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, 2 மாதங்களில் சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 31 வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும், வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்களும் நடைபெற்றன. அதன்படி, செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31 வரை தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 13 லட்சத்து 73 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 99 ஆயிரத்து 458 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 696 பேரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாகவும், பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய 20 லட்சத்து 7 ஆயிரத்து 412 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *