ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் பலி.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் பலி.

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று குடியிருப்பின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 வீரர்கள் பலியாகினர். இஸ்தான்புல்லில் உள்ள சமந்திரா விமானத் தளத்திலிருந்து  அந்த ராணுவ ஹெலிகாப்டரில் 5 பேர் இருந்தனர். சங்கத்தீப் என்ற இடத்தில் குடியிருப்புகளின் மீது பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது.

பின்னர் அடுக்குமாடி குடியிருப்புகளின் இடையே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்தவர்களில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு வீரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *