ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார மன்ற மாநாட்டில் முக்கிய விருந்தாளியாகப் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டொக் (Vladivostok),-ல் 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கிழக்கத்திய பொருளாதார மன்ற மாநாடு நடத்தப்படுகிறது.
ரஷ்யாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு இந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்படும் மாநாட்டுக்கு முக்கிய விருந்தாளியாக பங்கேற்று சிறப்புக்குமாறு ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்களையும் மோடிக்கு புதின் தெரிவித்துள்ளார்.