தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தொகுதிவாரியாக பிரச்சார வியூகம், வாக்குச்சாவடி முகவர் நிலையில் இருந்து ஒவ்வொரு கட்டத் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தி.மு.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் இணைந்து, இணக்கமாக பணியாற்றுவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, முன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் அது குறித்து உச்சநீதிமன்றத்தை அணுகலாமா தேர்தல் ஆணையத்தை அணுகலாமா என்பன உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் கருத்துக் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது