கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத 39 கட்சிகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி டார்ச் சின்னத்தை தங்கள் கட்சிக்கு ஒதுக்கியது மிகவும் பொருத்தமானது எனக் கூறியுள்ள கமல்ஹாசன், இதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி கூறிக் கொள்வதாக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மற்றும் இந்திய அரசியலில் புது யுகம் படைக்கும் இலக்கை அடைய சுடரை ஏந்திச் செல்வோம் என்றும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.