ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்.

ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான 54கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய நிதியமைச்சராகப் ப.சிதம்பரம் இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் விதிகளை மீறி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கக் கார்த்திக்கு ஐஎன்ஸ் எக்ஸ் மீடியா லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்று அமலாக்கத்துறை கார்த்திக்குச் சொந்தமான 54கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. டெல்லி  ஜோர்பாக்கில் உள்ள வீடு, உதகமண்டலம், கொடைக்கானலில் உள்ள பங்களாக்கள், பிரிட்டனில் உள்ள வீடு, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் உள்ள டென்னிஸ் கிளப் ஆகியன முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *