நாகை மாவட்டம் வேதாரண்யம், கரியாப்பட்டிணம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் உள்ளிட்ட பகுதிகளில் வாந்தி, பேதி காரணமாக பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் என சுமார் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேதாரண்யம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கிராமபுரங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறது.
கொள்ளிட்டம் கூட்டு குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீரால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என சுகாதரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.