சென்னையில் இருந்து 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

சென்னையில் இருந்து 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம், சென்னையில் இருந்து மட்டும் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தென்மாவட்டங்களுக்கு கடந்த 4 நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

நேற்று இரவு நிலவரப்படி 13 ஆயிரத்து 214 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இவர்களில் ஒன்றரை லட்சம் பேர் முன்பதிவு செய்து பேருந்துகளில் சென்றுள்ளனர். தீபாவளிக்காக நேற்று இரவும் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் திரண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *