சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று முதல் அமல்

சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று முதல் அமலாகும் நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் அண்மையில் நடைபெற்ற 31-வது ஜி.எஸ்.டி.

கவுன்சில் கூட்டத்தில் 100 ரூபாய்க்கு மேல் கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு கீழ் கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், குறைக்கப்பட்டது.

இந்த வரிக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு 14 ரூபாய் மேல் வசூல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. வரி தற்போது டிக்கெட் விலைக்கு ஏற்ப 6 முதல் 12 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. இதையடுத்து டிக்கெட்டுகளின் விலை 5 ரூபாய் முதல்12 ரூபாய் வரை குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *