பிலிப்பைன்ஸ் அழகி கேத்ரியனா கிரே, மிஸ் யூனிவர்ஸ் ஆக தேர்வு

பிலிப்பைன்ஸ் அழகி கேத்ரியனா கிரே, பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிஸ் யூனிவர்ஸ் என்கிற பட்டத்துக்கான போட்டி நடைபெற்றது.

94நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். உடல் அமைப்பு, தோற்றப்பொலிவு, புன்முறுவல், மதிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் பிரபஞ்ச அழகி யார் என்பதை நடுவர்கள் தீர்மானித்தனர்.

24வயதான பிலிப்பைன்ஸ் அழகி கேத்ரியனா கிரே பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமரின் கிரீன் இரண்டாமிடம் பெற்றார். வெனிசுலா அழகி மூன்றாமிடம் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *