டிஎன்பிஎஸ்சி மூலம் 320 சிவில் நீதிபதிகள் நேரடியாக தேர்வு

தமிழ்நாடு நீதித்துறை பணியில் சிவில் நீதிபதிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நேரடியாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்காக எழுத்துத்தேர்வும், நேர்முகத்தேர்வும் நடத்தப்படுகிறது. சட்ட பட்டதாரிகள், நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்றுபவர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள் சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வழக்கறிஞர்களுக்கு வயது வரம்பு 25 முதல் 35 ஆகவும், இடஒதுக்கீட்டின்கீழ் வருவோருக்கு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி) அதிகபட்சம் 40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்ட பட்டதாரிகளாக இருப்பின் குறைந்தபட்சம் 22 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். வயது வரம்பு இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் 27 ஆகும். படித்து முடித்து 3 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வைப் பொருத்தவரையில், மொழிபெயர்ப்பு தாள் மற்றும் சட்ட பாடத்தில் 3 தாள்கள் என மொத்தம் 4 தாள்கள் இடம்பெறும். கேட்கப்படும் கேள்விகளுக்கு விரிவாக பதில் எழுத வேண்டும். ஒவ்வொறு தாளுக்கும் தலா 100 மதிப்பெண் வீதம் மொத்தம் 400 மதிப்பெண். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதற்கு 60 மதிப்பெண். இறுதியாக, எழுத்துத்தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணிநியமனம் அமைந்திருக்கும்.

கடந்த 2014-ம் ஆண்டு 162 சிவில் நீதிபதிகள் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுசெய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில், இந்த ஆண்டு 320 சிவில் நீதிபதி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். சிவில் நீதிபதி பதவியில் இவ்வளவு அதிகமான காலியிடங்கள் நிரப்பப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

14.96 GB (99%) of 15 GB used
Last account activity: 20 minutes ago

Currently being used in 1 other location  Details

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *