மீண்டும் திரையில் இணையும் ஆர்யா சாயிஷா ஜோடியினர் 

நடிகர் ஆர்யாவுடன் ‘கஜினிகாந்த்’, ‘காப்பான்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர் நடிகை சாயிஷா. இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டெடி’ என்னும் படம் உருவாகவுள்ளது. இதில் ஆர்யா – சாயிஷா ஜோடியினர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது. இதில் சதீஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *