Dragonfly தேடு பொறி திட்டத்துக்கு எதிராக கூகுள் ஊழியர்கள் போராட்டம்

சீனாவில் டிராகன் ஃபிளை என்ற தேடு பொறியைக் கொண்டுவரும் திட்டத்துக்கு கூகுள் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

சீனாவின் ஆன்லைன் தணிக்கை விதிகளுக்கு ஏற்ப டிராகன் ஃபிளை என்ற கோட் (Code) கொண்ட தேடுபொறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, கூகுள் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூகுள் ஊழியர்கள் சுமார் 30 பேர் மனு அளித்துள்ளனர்.

ஆட்சி நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமாக தணிக்கை விதிகளுக்கு இணங்கி சென்றால், பிற நாடுகளும் இதேபோன்று கேட்கக் கூடிய தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுத்துவிடும் எனவும், அதையும் கூகுள், ஏற்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது, கூகுளின் நிறுவன மதிப்பை குறைக்கும் வகையில் இருப்பதால், இந்நடவடிக்கையைக் கைவிடுமாறு அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *