100 அமெரிக்க போர் விமானங்களை வாங்கும் ஜப்பான் அரசு

அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக 100 போர் விமானங்களை வாங்க, ஜப்பான் அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன ராணுவத்தின் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் மறைமுக அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், ஏற்கெனவே அமெரிக்காவிடம் இருந்து நாற்பத்தி இரண்டு எஃப்.35 ரக போர் விமானங்களை வாங்க ஜப்பான் முடிவு செய்தது.

இந்நிலையில், தற்போது மேலும் அதே ரக 100 போர் விமானங்களை, வாங்குவது குறித்து ஜப்பான் அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *