பாகிஸ்தானில் கர்ப்பிணியாக இருந்ததால் நடனமாட மறுத்த பாடகி சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் கர்ப்பிணியாக இருந்ததால் நடனமாட மறுத்த பாடகி சுட்டுக் கொலை

சிந்து மாவட்டத்தில் உள்ள லர்கனா பகுதியில் சமினா சிந்து என்றழைக்கப்படும் பாடகி ஒருவர் அமர்ந்தபடி பாடல்களைப் பாடிக்கொண்டிருக்க அவர் மீது சிலர் பணத்தாள்களை வீசிக் கொண்டிருந்தனர். அப்போது தாரிக் அஹ்மத் ஜடோய் எனும் குடிகாரன் (Tarique Ahmed Jatoi) எழுந்து நடனமாடுமாறு கேட்டான். முதலில் எழுந்து நிற்க மறுத்த கர்ப்பிணி பாடகி, பின் எழுந்து நின்று பாடத் தொடங்கினார். ஆனால் தாம் கர்ப்பிணியாக இருப்பதால் ஆட மறுத்த அவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய குடிகாரக் கொடூரன், 3 முறை சமினாவை நோக்கி சுட்டான்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே கர்ப்பிணி பாடகியான சமினாவின் உயிர் பிரிந்தது. பிறக்காத குழந்தையையும் சேர்த்துக் கொன்றவன் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிய வேண்டும் என பாடகியின் கணவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *