கோல்டன் குளோப் திரைப்பட விருதுகள் ஜனவரி 6ம் தேதி அறிவிப்பு

ஆஸ்கருக்கு முன்னோட்டமாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியாவில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள திரைப்படங்களைக் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது காண்போம்.

சிறந்த சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான 76வது கோல்டன் குளோப் விருதுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட உள்ளன.
கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் பிரம்மாண்டமான அரங்கில், கனடா நடிகையான சாண்ட்ரா ஓ மற்றும் நகைச்சுவை நடிகரான ஆண்டி சாம்பர்க் ஆகியோர் விருதுகளை அறிவிக்க உள்ளனர்.

இந்த விருதுகளைப்பெற பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. A STAR IS BORN’,’BOHEMIAN RHAPSODY’ பிளாக் பாந்தர், ‘THE FAVORITE’ , கிரீன் புக், மேரி பாப்பின்ஸ் ரிடர்ன்ஸ் ‘CRAZY RICH ASIANS’ வைஸ், தி வைஃப் ‘SPIDER-MAN: INTO THE SPIDER-VERSE’ போன்ற 28 படங்கள் போட்டியிடுகின்றன.

சிறந்த நடிகருக்கான போட்டியில் வைஸ் படத்தில் நடித்த கிறிஸ்டின் பேல் , லின்மேன் மிராண்டா, விகோ மார்டின்ஸன், ராபர்ட் ரெட்போர்ட், ஜான் ரெய்லி ஆகியோரும் சிறந்த நடிகைகள் பட்டியலில் எமிலி பிளன்ட், சார்லிஸ் தெரான், ஒலிவியா கால்மன், கான்ஸ்டன்ஸ் வூ , எல்சி பிஷர் உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர்.

சிறந்த இயக்குனர்கள் பட்டியில் பிராட்லி கூப்பர், அல்போன்சோ குயரன், பீட்டர் பரேலி, ஸ்பைக் லீ, ஆடம் மிக்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வெளிநாட்டுப் படங்களின் வரிசையில் லெபனான் நாட்டைச் சேர்ந்த “Capernaum” பெல்ஜியம் நாட்டின் “Girl” ஜெர்மனியின் “Never Look Away” மெக்சிகோவின் “Roma” மற்றும் ஜப்பான் நாட்டின் “Shoplifters” படங்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *