அமேசான் செல்லர் சர்வீசஸ், ரூ.6287 கோடி இழப்பை சந்தித்துள்ளது

அமேசான் நிறுவனத்தின் இந்திய பிரிவான அமேசான் செல்லர் சர்வீசஸ், கடந்த நிதியாண்டில் சுமார் 1 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அமேசான் இந்தியாவின் மிகப்பெரிய பிரிவான இந்நிறுவனத்தின் இழப்பு, முந்தைய நிதியாண்டைவிட 30 சதவீதம் அதிகரித்து 6287 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் போட்டியை தாக்குப்பிடிக்கும் வகையில், உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் முதலீடுகளை செய்வதால் இந்த நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஃபிளிப்கார்ட் இந்தியா நிறுவனம் 2 ஆயிரத்து 64 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்துள்ளது. அதேசமயம் அந்நிறுவனத்தின் வருவாயும் 39 சதவீதம் அளவுக்கு உயர்ந்து 21 ஆயிரத்து 658 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *