128 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சரிவு… முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்வு

இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் சரிவடைந்துள்ள நிலையில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

சர்வதேச காரணிகளின் தாக்கத்தால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இழப்பால் உலக அளவில் முதல் 500 இடங்களில் இருக்கும் 128 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 9 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய்  சரிவடைந்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரையில் 23 செல்வந்தர்களின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் சரிவடைந்துள்ளது. அதிகபட்டசமாக உருக்கு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் லெட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 29 சதவீதம் அதாவது, 39 ஆயிரத்து 200 கோடி ரூபாய் குறைந்துள்ளது.

உலக அளவில் 4வது பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சன் பார்மா நிறுவனர் திலிப் சங்வி சொத்து மதிப்பு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் குறைந்துள்ளது.

இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் 28 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *