மோடிக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தலைவர் நீலநிற ஜெர்சியை பரிசளித்தார்

மோடிக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தலைவர் நீலநிற ஜெர்சியை பரிசளித்தார்

அர்ஜெண்டினாவில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த FIFA தலைவர், அவருக்கு நீல வண்ண ஜெர்சியை பரிசளித்தார்.

ஜி20 மாநாட்டிற்கிடையே பிரதமர் மோடியை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA வின் தலைவர் கியான்னி இன்பாண்டினோ (Gianni Infantino) சந்தித்தார்.

அப்போது பெயர் அச்சிடப்பட்ட நீல வண்ண மேற்சட்டையை மோடிக்கு பரிசளித்தார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அர்ஜெண்டினாவில் இருந்து கொண்டு கால்பந்தை பற்றி யோசிக்காமல் இருப்பது சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமானவர்கள் என்று பதிவிட்டுள்ள அவர், FIFA தலைவரின் அன்புக்கு நன்றிக் கூறிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *