சிப் பொருத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகள் வரும் டிசம்பர் 31-க்குப் பின் செல்லாது – ரிசர்வ் வங்கி

சிப் பொருத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகள் வரும் டிசம்பர் 31-க்குப் பின் செல்லாது – ரிசர்வ் வங்கி

சிப் பொருத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகள் வரும் டிசம்பர் 31-க்குப் பின் செல்லாது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் நினைவூட்டியுள்ளது. 2008-க்கு முன் வங்கிகளால் வழங்கப்பட்ட யூரோ பே, மாஸ்டர் கார்ட், விசா ரக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சிம் கார்டு போன்ற சிப் பொருத்தப்பட்டிருக்கவில்லை. அதன் பின் சில வங்கிகளால் விநியோகிக்கப்பட்ட கார்டுகளிலும் மேக்னடிக் ஸ்டிரைப் மட்டுமே உள்ளது. அதை எளிதில் ஸ்கிம்மர் கருவிகள் மூலம் மாற்றிவிட முடியும் என்பதால், சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை விநியோகிக்க 2015-ம் ஆண்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.

அதற்கான அவகாசமாக வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை வங்கிகளுக்கு அவகாசம் வழங்கியிருந்தது. எனவே, சிம் போன்ற சிப் பொருத்தப்படாத பழைய மேக்னடிக் ஸ்டிரைப் கார்டுகளை மாற்றி, சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை வழங்குமாறு வங்கிகளிடம் வாடிக்கையாளர்கள் கோரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2019-க்கு முதல் சிப் இல்லாத டெபிட், கிரெடிட் கார்டுகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *