2018 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு; இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை தொடக்கம்…

2018 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு தேதியை மத்திய கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தேர்வு என்ற அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு கடந்த வருடம் முதல் நடைபெறுகிறது. அதன்படி 2018ஆம் ஆண்டிற்கான தேர்வு தேதியை மத்திய கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த தேர்வுக்கு மார்ச் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய கல்வி வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணபிக்க முடியும் என தெரிவித்துள்ள சி.பி.எஸ்.சி, பொதுப்பிரிவினர், ஒபிசி பிரிவினருக்கு ஆயிரத்து 400 ரூபாய் கட்டணமும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 750ரூபாய் தேர்வு கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *