ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த்! – எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த்! – எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறகின்ற போர்வையில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், போராட்டக்காரர்களை விஷக் கிருமிகள் என்றும், சமூகவிரோதிகள் என்றும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறகின்ற போர்வையில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், போராட்டக்காரர்களை விஷக் கிருமிகள் என்றும், சமூகவிரோதிகள் என்றும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஒரு அரச பயங்கரவாதத்தின் பிரதிநிதியாகவே ரஜினிகாந்த தூத்துக்குடி சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராகவும், காவல்துறையின் காட்டுமிரண்டித் தாக்குதல்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்குப் பதிலாக, தமிழகத்தில் போராட்டங்களும், சமூகவிரோதிகளும் அதிகரித்துள்ளனர் என ஒரு விஷமக் கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
தன்னெழுச்சியாக நடந்த மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய ரஜினிகாந்தின் இந்தக் கருத்தை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வரும் பாஜகவின் குரலைத் தான் ரஜினி எதிரொலித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த மேலும் தனது பேட்டியில் “எதற்கெடுத்தாலும் முதல்வரைப் பதவி விலகச் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல” என்று கூறியிருப்பது அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்த தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் பாஜகவால் அனுப்பப்பட்ட தூதராகவே ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார் என்பதை மெய்ப்பித்துள்ளது.
ஸ்டெர்லைட், மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து தன்னெழுச்சியாக நடைபெற்றுவரும் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் பாசிச சக்திகளின் ஏஜென்ட் நடிகர் ரஜினிகாந்தை தமிழக மக்கள் முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *