மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு சிறுநீரக பாதிப்பு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு சிறுநீரக பாதிப்பு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்தினரையும் குண்டடி பட்டு மருத்துவமனையில் இருப்போரையும் சந்தித்து ஆறுதல் கூற அனுமதிக்க வேண்டும்!

துப்பாக்கிச் சூட்டின் சூத்ரதாரிகள், அதற்கு உத்தரவிட்டவர்கள், சுட்டவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகிய அனைவரையும் கைது செய்து குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்!

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்!

துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் மற்றும் குண்டடி பட்டோரின் புகைப்படம், பெயர், முகவரி விவரங்களை வெளியிட வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா ஒரு கோடி ரூபாயும் குண்டடி பட்டோருக்கு தலா 50 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்!

உடனடியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்!

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி (25-05-2018)அன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டது முதல் நேற்று (28-05-2018) வரை நீர் கூட அருந்தமல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன். அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரை ம,தி,மு,க, பொதுச்செயலாளர், திரு, வைகோ. அவர்கள் நேற்று உண்ணாவிரதத்தை கைவிடுமாறு புழல் சிறையில் நேரில் வலியுறுத்தியதையடுத்து, உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிட்ட அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவ மனையால் அனுமதிக்கப்பட்டார், தற்போது, மருத்துவ பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை தீவிர சிகிச்கை பிரிவுக்கு மாற்றியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *