மக்கள் விரோத ஆட்சியை அகற்ற விழிப்புணர்வு போராட்டம் – K.சங்கர பாண்டியன்

மக்கள் விரோத ஆட்சியை அகற்ற விழிப்புணர்வு போராட்டம் – K.சங்கர பாண்டியன்

பொய்களையும், புரட்டுகளையும் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பிஜேபி அரசை கண்டித்து  மக்கள் நம்பிக்கைத் துரோக நாள் அல்லது மக்கள் வஞ்சிக்கப்பட்ட நாள் ஆக அனுஷ்டிக்கும்படி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் அறிவுறுத்துதல்படி .இ.காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் சுற்றறிக்கை விடுத்துள்ளார். அதன்பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் ஆணைக்கிணங்க நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான  செல்லப்பாண்டியன் பவனம் முன்புநெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. K.சங்கர பாண்டியன் தலைமையில் மத்திய மோடி அரசின் மக்கள் விரோத சர்வாதிகார போக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் முழங்க ஆர்ப்பாட்டமும் நான்கு வருட மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்தும் இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து எல்லா வகையிலும் மக்களை மொட்டையடித்த மோடி அரசின் நான்கு வருட ஆட்சியைக் கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் 4 பேர் மொட்டையடித்து கண்டனத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பொன்.ராஜேந்திரன், மாநகர் மாவட்ட பொருளாளர் S.ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் P.N.உதயகுமார், U.வெள்ளப்பாண்டி, மண்டலத் தலைவர்கள் A.தனசிங் பாண்டியன், J.சுல்தான் இப்ராஹிம், மாவட்ட நிர்வாகிகள் ரகுபதி ராஜன், தச்சை K.S.மணி, M.அபுபக்கர் சித்திக், M.B.R.சாதிக், P.சங்கர நாராயணன், மகளிரணி மாரியம்மாள், மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் U.ராஜீவ் காந்தி, மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் S.முஹம்மது அனஸ் ராஜா, மாநகர் மாவட்ட தகவல் அறியும் துறை தலைவர் நல்லாசிரியர் A.சுப்ரமணியன், மாநகர் மாவட்ட இந்திய தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பொன்ராஜ், மேலப்பாளையம் பகுதி செயலாளர் P.K.P.அம்ருதீன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *