போதிய உடற்பயிற்சி இன்மையால் உலகில் 140 கோடி பேருக்கு கடும் நோய்கள்

போதிய உடற்பயிற்சி இன்மையால் உலகில் 140 கோடி பேருக்கு கடும் நோய்கள்

போதிய உடற்பயிற்சி இன்மையின் காரணமாக உலகில் 140 கோடி பேர் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு 168 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக வளர்ச்சி அடைந்த நாடுகளில், வசதி மிக்க வாழ்க்கை முறை காரணமாக மூன்றில் ஒரு பங்கு பெண்களும், நான்கில் ஒரு பங்கு ஆண்களும் இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ஒவ்வொருவரும் அன்றாடம் குறைந்த பட்ச உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், இதுபோன்ற நோய் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும் எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில் மனப்பிறழ்வு, இதய நோய் போன்ற பாதிப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *