பேரறிவளான் உட்பட 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக உடனடியாக முடிவெடுக்க வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை

பேரறிவளான் உட்பட 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக உடனடியாக முடிவெடுக்க வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்யத் தமிழக சட்டமன்றத்தில் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதன்பிறகு வாழ்நாள் சிறை வாசிகளாகஇருக்கும் ஏழு தமிழர்களை முன்கூடியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த ஜெயலலிதாதலைமையிலான அதிமுக அரசு 2014 ஆண்டே அவர்களை விடுதலை செய்வதற்காக மத்திய அரசிற்குக் கடிதம் எழுதியிருந்தது.

தமிழக அரசின் கடிதத்தை கருணையுடன் பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டிய மத்திய அரசு, அக்கடிதத்தைப் பல நாட்கள் கிடப்பில் போட்டு விட்டு பிறகு குடியரசுத் தலைவர் மூலம் பேரறிவாளன்உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை நிராகரித்தது-.

இந்நிலையில் இந்த ஏழு தமிழர்களின் விடுதலைக் குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றுஉச்சநீதிமன்றம் இன்று கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றேன். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மனிதநேய மக்கள் கட்சி உட்படப் பல மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் கூறி வந்ததை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 14வதுசட்டமன்றத்தில் ஏழு தமிழர் விடுதலைத் தொடர்பான விவாதத்தின் பங்கு கொண்டு நான் உரையாற்றியபோது அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது விதியின் படி மாநில அரசுக்கு வாழ்நாள் சிறைவாசிகளைவிடுதலைச் செய்யும் அதிகாரம் உண்டு என்று நான் பேசினேன். இது குறித்து தமிழக அரசு மத்திய அரசின்ஒப்புதலைப் பெற கடிதம் எழுதி மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுத்தது. தற்போது மாநிலஅரசிற்கு இந்த அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதின் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுக்கத் தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். . இன்றே தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநர்மூலம் அவர்களை விடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *