பிரதீபா, அனிதா தற்கொலக்கு தமிழக அரசு பொருப்பேற்று பதவி விலகி தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும்! – S.A.N.வசீகரன்

பிரதீபா, அனிதா தற்கொலக்கு தமிழக அரசு பொருப்பேற்று பதவி விலகி தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும்! – S.A.N.வசீகரன்

பிரதீபா, அனிதா தற்கொலக்கு தமிழக அரசு பொருப்பேற்று பதவி விலகி தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும்!

இதுவே தமிழக மக்களுக்கு திரு.எடப்பாடி பழனிசாமி செய்யும் மிகப்பெரிய நன்மையாக இருக்கும்!!

நீட் தேர்வால் தமிழகத்தில் இரண்டாவது பலி மாணவி பிரதீபா மறைவிற்கு தமிழக ஆம்ஆத்மிகட்சி ஆழ்ந்த இரங்கல்!!!
வசீகரன் அறிக்கை…

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் இவ்வாண்டு பிரதீபா என்ற விழிப்புரத்தை சேர்ந்த ஏழை மாணவி பலியாகியாகியுள்ளார்

பிரதீபா எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நேற்று மரணமடைந்துள்ளார்.

அரசு பள்ளியில் பயின்ற பிரதீபா 10 ஆம் வகுப்பில் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார், தனியார் பள்ளியில் +2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றுள்ளார், இப்பொழுது நீட் தேர்வில் 39 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது, இதில் மண உளைச்சலுக்கு ஆளான இந்த கிராமத்து மாணவி பிரதீபா தன் எதிர்கால மருத்துவர் கணவை தகர்த்தெரிந்த நீட் தேர்வில் கண்ட தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் இறந்துள்ளனர், இதே போல் கடந்த ஆண்டு அணிதாவையும் இழந்துள்ளோம்.

நீட் தேர்வு தமிழகத்திற்கு வராது, வர விடமாட்டோம் என்று தமிழக எடப்பாடி அரசு ஏற்கனவே மாணவர்களுக்கு உத்தரவாதம் அளித்ததை யாரும் மறந்து விட முடியாது.
மத்திய மோடி அரசிடம் மண்டியிட்டு கிடக்கும் தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்திலும் படுதோல்வி அடைந்துள்ளது.
ஆகவே இந்த இரண்டு தற்கொலைகளுக்கும் பொருப்பேற்று எடப்பாடி அரசு பதவியிலிருந்து விலகி இனியாவது இது போன்ற தற்கொலைகள் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் மூலம் நடக்கும் கொலைகளிலிருந்து மக்களை காப்பாற்றிட வேண்டும் என்று தமிழக அரசையும் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழநிசாமி அவர்களையும் தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பாகவும் தமிழக மக்கள் சார்பாகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன், இதுவே எடப்பாடி அரசு தமிழக மக்களுக்கு செய்யும் மிகபெரும் நன்மையாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *