நாட்டிலேயே முதன் முறையாக மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் வழங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும் என்று கூறினார். 2 ஆண்டிற்குள் அனைத்து வகுப்பு பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்றும், அனைவரும் வியக்க தக்க வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர் விபத்தில் உயிரிழந்தால் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், படுகாயமடைந்தால் காயத்துக்கு ஏற்ப காப்பீடு வழங்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். சிறந்த மாணவர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடு அனுப்ப இருப்பதாக கூறிய செங்கோட்டையன், மாணவர்கள் – ஆசிரியர்கள் இடையிலான மோதல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*