தமிழகத்தை ஒட்டிய வங்க கடல் பகுதியில் ஆந்திரா முதல் கன்னியாகுமரி வரை, மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில், வரும் 12-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை வறண்ட வானிலையே நிலவும் எனவும், இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2017-10-10