தண்டவாளத்தில் கிடந்த மரத்தை பார்த்து ரயிலை நிறுத்திய ஓட்டுநர்

தண்டவாளத்தில் கிடந்த மரத்தை பார்த்து ரயிலை நிறுத்திய ஓட்டுநர்

நெல்லை மாவட்டம் பகவதிபுரத்தில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை பார்த்து, ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3 மணியளவில் பகவதிபுரம் ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. உக்கணம் ரயில் நிலையத்தை நெருங்கிய நிலையில், ரயிலின் வேகத்தை குறைத்த ஓட்டுநர், தண்டவாளத்தின் குறுக்கே பெரிய மரம் ஒன்று கிடப்பதை கண்டார். உடனடியாக ரயிலை நிறுத்திய அவர், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே ஊழியர்கள், மரத்தை வெட்டி அகற்றி, தண்டவாளத்தை சீரமைத்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *