காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

காஞ்சி மட பீடாதிபதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஆச்சார்யாவின் அவர்களின் மறைவு செய்தியை கேட்டு, ஆழ்ந்த வேதனை அடைந்தேன். லட்சக்கணக்கான பக்தர்களின் இதயங்களிலும், மனங்களிலும், அவரது முன்மாதிரியான சேவை மற்றும் நல்லெண்ணங்களினால் வாழ்ந்து வருவார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*