கலைஞர் கருணாநிதி மறைவு: ஏழு நாள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

கலைஞர் கருணாநிதி மறைவு: ஏழு நாள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

சமத்துவஞாயிறு தலைவர் கலைஞர் அவர்களின் மறைவையொட்டி அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏழு நாட்களுக்குத் துக்கம் கடைபிடிக்கிறது.
இன்று (8-8-2018) முதல் ஏழு நாட்களுக்கு (14-8-2018) கட்சியின் கொடியை  அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டுமென்றும்,  கட்சியின் சார்பில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட  வேண்டுமென்றும் அறிவிக்கப்படுகிறது.
ஆகத்து-17 தமிழர் எழுச்சிநாள் அன்று ஒரு இலட்சம் பனைவிதைகள் நடுகிற  செயல்திட்டத்தைத் தவிர, பிற விழாக்கள் அனைத்தையும் இன்று முதல் 15 நாட்களுக்குத் தள்ளிவைக்குமாறு கட்சியின் நிர்வாகிகள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் யாவரும் ஆங்கங்கே தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்தை வைத்து மலர்த்தூவி மரியாதை செலுத்துமாறும் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் ஏற்பாடு செய்யும் அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறும் கேட்டுக்கொள்ப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *