இன்று தொடங்குகிறது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி

இன்று தொடங்குகிறது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி

டிஎன்பிஎல் தொடரின் 3-ஆவது சீசன் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இன்று நடக்கும் முதல் போட்டியில் திண்டுக்கல் அணியும், திருச்சி அணியும் மோதுகின்றன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்தே இந்தப் போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டிஎன்பிஎல் தொடரின் முதல் சாம்பியன் கோப்பையை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், இரண்டாவது சாம்பியன் பட்டத்தை சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும்  கைப்பற்றின.

இந்நிலையில் டிஎன்பிஎல் தொடரின் 3-வது சீசன் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, பாபா இந்திரஜித் தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது.

போட்டிக்கு முன்னதாக மாலை 6.10 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பு நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *